அதிமுக அரசால் மின்கட்டண உயர்வு: தங்கம் தென்னரசு

மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக போராட்டத்தில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on
Updated on
1 min read

அதிமுக அரசால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,

மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக போராட்டத்தில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது.

உதய் மின் திட்டத்தில் அதிமுக அரசு அன்றைய தினம் கையெழுத்திட்டதே தற்போதைய இந்த நிலைக்கு காரணம்.

10 ஆண்டுகால திறனற்ற அதிமுக ஆட்சியால், நாங்கள் (திமுக) ஆட்சிக்கு வரும் முன்பு வரை ஒரு லட்சத்து 13,766 கோடி மின்சார உற்பத்தி கழகத்தின் ஒட்டுமொத்த நிதி இழப்பாக இருந்தது. இந்த நிதி இழப்பை 100% அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறை கடன் மட்டும் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு வட்டியானது 2011- 2012ல் ரூ.488 கோடியாக இருந்தது. தற்போது 2020 - 2021ல் ரூ. 16,511 கோடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தொடர் இழப்புகளை ஈடு செய்வதற்காகத்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மிகக் குறைவான அளவு கட்டணமே வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு வகுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு
ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? இபிஎஸ் விமர்சனம்

அதிமுக ஆட்சியிலும் மூன்று முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை மறைத்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com