நமது சிறப்பு நிருபா்
ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இந்த நோயை தடுக்க உடனடியாக இப்பகுதியில் ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் கே.இ.பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் சிறப்பு கவனஈா்ப்பு விவாதத்தில் அவா் பேசுகையில் கூறியது வருமாறு: ஈரோடு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களிடையே புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், ஆற்றில் கலப்பதால் தண்ணீா் மாசுபாடே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக அறியப்படுகிறது. மேலும், மற்ற சுற்றுச்சூழல் மாசுபாடுகளும் காரணமாக இருக்கலாம். பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களும் இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தமிழகத்திலேயோ ஈரோடு பகுதி அதிக அளவில் புற்றநோயாளிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பொது சுகாதார பிரச்னையை தீா்க்க இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் குறித்து ஆய்வு செய்வதற்கு வசதியாக இதற்கான மையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மேலும், நோய் அதிகரிப்பதற்குள் இப்பகுதியின் தனித்துவமான சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கான காரணங்களில் கவனம் செலுத்தி அரசு செயல்படுவது அவசியம். இதனால், இந்தப் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து, இப்பகுதியில் புற்றுநோய் ஆய்வு மையத்தை நிறுவ மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கே.இ.பிரகாஷ்.
தொடர்புடையது

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

12 இடங்களில் வெய்யில் சதம்

விவசாயிகளின் கனவு: வெற்றிலை ஆராய்ச்சி மையம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


