2023-24ஆம் ஆண்டு ஐடிஆர் தொகை எப்போது கிடைக்கும்? எளிதாக அறியலாம்!

2023-24ஆம் ஆண்டு வருமான வரித் தாக்கல் செய்த தொகை எப்போது கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள வசதி
வருமான வரி
வருமான வரி
Published on
Updated on
1 min read

மாத வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் 2023-24ஆம் ஆண்டுக்கான தங்களது வருமான வரித்தாக்கல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தவறினால் மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சட்டரீதியாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை, 2023 - 24ஆம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கல் அறிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டு, வரித்தாக்கல் தொகை எப்போது திரும்பக் கிடைக்கும் என்று காத்திருப்பவராக இருந்தால், அதனை எளிதாக அறிந்து கொள்ள வழிவகை உள்ளது.

ஒருவர் வருமான வரித்தாக்கல் தொகை எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள 2 தகவல்கள் அவசியம்.

1. வருமான வரித்துறையின் இ-ஃபில்லிங் இணையதளத்தில் உள்நுழைய ஒரு அடையாள முகவரி மற்றும் கடவுச்சொல்.

2. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ததை உறுதி செய்யும் எண்.

இவை இரண்டும் இருந்தால் incometax.gov.in என்ற இணையதளத்தில் சென்று, உங்கள் அடையாள முகவரி மற்றும் பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்ளே செல்ல வேண்டும்.

அங்கே, இ-ஃபைல் என்ற வாய்ப்பை கிளிக் செய்து, இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் என்பதில், வியூ ஃபைல்டு ரிட்டர்ன்ஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வருமான வரி
புதிய வருமான வரி விதிப்பு முறையை 66% போ் தோ்வு: நேரடி வரிகள் வாரியம் தகவல்

அதில், எந்த ஆண்டுக்கான வருமான வரித் தாக்கல் நிலவரத்தை அறிய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

மற்றொரு வழியில், என்எஸ்டிஎல் என்ற இணையதளத்தில் ஒருவர் தனது பான் எண்ணை பதிவிட்டு, வருமான வரித் தாக்கல் செய்வதற்கான ஆண்டையும் தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ளலாம். அப்போது கேப்சா கோடை உள்ளிட்டு, பிரசீட் என்ற வாய்ப்பை தேர்வு செய்து ஒருவர் வருமான வரித் தாக்கல் செய்த தொகை திரும்ப எப்போது கிடைக்கும் என்ற விவரத்தை அறியலாம்.

ஐடிஆர் தாக்கல் செய்வதில், அறிக்கை மின்னணு முறையில் பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் ஐடிஆர் தாக்கல் செய்து நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குள் தொகை திரும்ப வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வண்டும். ஒரு வேளை அவ்வாறு நடக்காவிட்டால், மின்னஞ்சல் முகவரியில் வருமான வரித் துறையின் மின்னஞ்சல் ஏதேனும் வந்திருக்கிறதா என்பதை சோதனை செய்வது நலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com