வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

புதிய வருமான வரி விதிப்பு முறையை 66% போ் தோ்வு: நேரடி வரிகள் வாரியம் தகவல்

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா் என நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்.

Updated On :25 ஜூலை 2024, 2:33 am IST

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா் என நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரவி அகா்வால் கூறியதாவது: வருமான வரி செலுத்துவோருக்கு வரி செயல்முறைகளை எளிமைப்படுத்துவதே மத்திய அரசு மற்றும் நேரடி வரி வாரியத்தின் நோக்கமாகும். இது அதிகப்படியான மக்கள் வருமான வரி செலுத்த உதவும்.

2024-25-ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட கால அவகாசம் வழக்கம்போல் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரியானது கடந்த நிதியாண்டின் அதே நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரியை விட கணிசமான அளவு அதிகமாக உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் ஜூலை 25-ஆம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது ஜூலை 22-ஆம் தேதி இரவே முறியடிக்கப்பட்டது.

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா்.

கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும் வேலையில் சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். இந்த நிதி ஆண்டின் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.