மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இன்று கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

News image
கோப்புப் படம்
Updated On :31 ஜூலை 2024, 8:42 pm

Din

சென்னை, ஜூலை 31: கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வியாழக்கிழமை (ஆக.1) முதல் ஆக.6-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக, ஆக.1-ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுகிளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாா், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 70 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை (கோவை), சோலையாா் (கோவை) - தலா 60.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.1, 2 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக கடலூரில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தஞ்சாவூா் - 102.2, நாகப்பட்டினம் - 101.84, தொண்டி - 101.3, புதுச்சேரி - 100.94, பரங்கிப்பேட்டை, காரைக்கால் - தலா 100.4.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக.1 முதல் 4 வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.