47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் பாஜகவை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்: தமிழிசை

தமிழக மக்கள் பாஜகவிற்கு ஆதரவு: தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

News image
Updated On :2 ஜூன் 2024, 7:17 am

DIN

தமிழகத்தில் பாஜகவை வரவேற்க மக்கள் தயாராகி வருவதாக புதுவை முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் தனது தந்தை குமரி ஆனந்தன் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிறந்த நாளை முன்னிட்டு அங்கு இருந்தவர்களுக்கு இனிப்புகளை புதுவை முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நாட்டில் நல்ல திட்டங்களை கொடுத்ததற்காக மக்கள் நன்றி தெரிவித்து வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கருத்துக்கணிப்புகளை விட பாஜக கூட்டணி கட்சி அதிக அளவில் வெற்றி பெறும் என தான் நம்புவதாக கூறினார். தமிழகத்தில் பாஜகவை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்பது தெரிகிறது. ஒரு தேசியக் கட்சிக்கு தமிழகத்தில் இப்படி ஒரு வரவேற்பு இருப்பது இது ஆரம்ப கட்டம். இது வரவேற்கத்தக்கது.

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கக் கூடியது. நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்ல பிரதமர் தியானம் செய்யலாம் யாரும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆன்மீகம் இடம் உள்ளது என்பதை உலகத்திற்கு பிரதமர் எடுத்துக் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் சிலைக்கும் சென்று அங்கும் மரியாதை செலுத்தி விட்டு தமிழ் மீதுள்ள பற்றையும் உணர்த்திவிட்டு தான் வந்துள்ளார். தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள், திராவிட மாடல் எந்த அளவிற்கு தோல்வி அடைந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. வேங்கை வயல் பிரசனை எவ்வளவு நாட்கள் ஆகி உள்ளது. இதுவரை ஒரு தீர்வு கூட ஏற்படவில்லை.

கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சென்னையிலேயே மூன்று நான்கு கொலைகள் அண்மையில் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.