விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

News image
Updated On :3 ஜூன் 2024, 4:08 am

DIN

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Story image

தொடர்ந்து, அண்ணாவின் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது கலைஞர் நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர்களையும் முதல்வர் வெளியிட்டார். இதற்கிடையே கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அவரது திருவுருப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு திமுகவினா் மக்கள் நலன் சாா்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூா் கிளை சாா்பிலும் நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.