கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வானத்தையே ஆளும் சூரியன் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

News image
Updated On :3 ஜூன் 2024, 8:22 am

DIN

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,

தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்!

தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்!

வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்!

முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!

இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி - தமிழினத்தின் எழுச்சி - தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்!

கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்! .இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.