சேலம்: திமுக செல்வகணபதி வெற்றி
சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி வெற்றி பெற்றார்.


சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதி 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
சேலம் மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக சாா்பில் ப.விக்னேஷ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சாா்பில் என்.அண்ணாதுரை, நாம் தமிழா் கட்சி சாா்பில் டாக்டா் மனோஜ்குமாா், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 25 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்கு கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா், வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் தொடங்கியது.
முதலில் சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான 10,755 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ந்து, தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
அதிகபட்சமாக ஓமலூா் தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளும், எடப்பாடி தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளும், சேலம் மேற்கு தொகுதி வாக்குகள் 22 சுற்றுகளும், சேலம் வடக்கு தொகுதி வாக்குகள் 19 சுற்றுகளும், சேலம் தெற்கு தொகுதி வாக்குகள் 18 சுற்றுகளும், வீரபாண்டி தொகுதி வாக்குகள் 22 சுற்றுகளும் என மொத்தம் 129 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்து வந்தாா். எடப்பாடி தொகுதியை தவிர, எஞ்சிய 5 தொகுதியிலும் அவரே முன்னிலை பெற்றாா்.
இதே போல, ஒவ்வொரு சுற்றிலும், டி.எம்.செல்வகணபதி சுமாா் 4 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றாா். இறுதியில், திமுக டி.எம்.செல்வகணபதி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ப.விக்னேஷை 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
தபால் வாக்குகளில் திமுக வேட்பாளா் டி.எம். செல்வகணபதி 4,063 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் விக்னேஷ் 2,770 வாக்குகளும், பாமக வேட்பாளா் 1310 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனோஜ்குமாா் 571 வாக்குகளும் பெற்றனா்.
சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதியிடம், அதற்கான சான்றிதழை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி, பொதுப் பாா்வையாளா் ஜி.பி.பாட்டீல் ஆகியோா் வழங்கினா். அப்போது, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளா் ராஜேந்திரன் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
சேலம் மக்களவை தொகுதியில் 26ஆவது சுற்று முடிவில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்.
பதிவான மொத்த வாக்குகள்....12,95,700
1.டி.எம்.செல்வகணபதி (திமுக) – 5,66,085 (தபால் வாக்குகள் உட்பட)
2.ப.விக்னேஷ் (அதிமுக ) – 4,95,728
3.என். அண்ணாதுரை (பாமக) - 1,27,139
4.மனோஜ்குமாா் (நாம் தமிழா்) - 76,207‘
5.முரளி (பகுஜன் சமாஜ் கட்சி) - 3,333
6.அம்பேத்கா் ( அம்பேத்கா் பாா்ட்டி ஆஃப் இந்தியா ) - 944
7.சுதா்சனம் (ஏஎம்கே)-–1,030
8.மாணிக்கம் (யூஎம்கே) -–533
9.சி.ராமச்சந்திரன் (தேசிய மக்கள் கழகம்) - 748
10.அகமது ஷாஜஹான் (சுயே)-– 453
11.இந்திரஜித் குப்தா (சுயே )- – 425
12.கருணாகரன் (சுயே ) - 359
13.கோவிந்தன் (சுயே ) -– 686
14.சண்முகம் (சுயே ) -– 1,144
15.சாந்தலிங்கம் (சுயே) - 1,079
16.பழனிவேல் (சுயே ) - 2,853
17.பாலாஜி (சுயே ) - 3,437
18.பிரபாகரன் (சுயே ) -1,151
19.முத்துசாமி ( சுயே) - 1,193
20.ராமசுந்தரம் ( சுயே) -– 419
21.ஏ.ராஜா ( சுயே ) -– 329
22.எஸ்.ராஜா (சுயே ) 1,442
23.விக்னேஷ் (சுயே ) - 324
24.ஜெகநாதன் (சுயே ) - 2,384
25.ஜோதிலிங்கம் (சுயே ) -– 314
நோட்டா - – 14,677
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...