தேர்தல் வெற்றி: கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்!

“வெற்றியை நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியான உங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.”
தேர்தல் வெற்றி: கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்!

சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கருணாநிதி நினைவிடம் சென்ற ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

எக்ஸ் தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

“எங்கும் நிறைந்திருந்து எங்களை என்றும் வழிநடத்தும் உயிரினும் மேலான தலைவர் கலைஞர். நீங்கள் அமைத்த பாதையில் நடைபோடும் திராவிட மாடல் அரசின் ஆட்சிக்குப் பாராட்டாய் இந்தியா கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை வழங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டு மக்கள், இந்த வெற்றியும் இனிப் பெறவுள்ள வெற்றிகளும் நீங்கள் விதைத்த கொள்கைகளாலும் எண்ணங்களாலும் விளைந்தவை. இந்த வெற்றியை நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியான உங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com