சென்னையில் விரைவில் பறக்கும் டாக்ஸி!

சென்னையில் விரைவில் பறக்கும் டாக்ஸி வசதி
பறக்கும் டாக்ஸி
பறக்கும் டாக்ஸி

சென்னை; அமெரிக்காவின் விமானக் கட்டுமான நிறுவனமான போயிங் கூட்டணியில், தமிழக அரசு, சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஏர் டாக்ஸி அல்லது பறக்கும் கார் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது, சென்னை மாநகரில் வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த மற்றும் குறுகிய தொலைவுகளுக்கு வான்வழியில் போக்குவரத்தை மேற்கொள்ள சென்னை பெருமாநகரப் பகுதிகளுக்குள் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் டேக்ஸிகள் இறங்குதளங்கள் இல்லாமல் குறுகிய பகுதிகளிலும் தரையிறங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நகர வான்வழித் திட்டம், பகுதி பகுதியாக சென்னையில் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஃபிளையிங் டேக்ஸிகள் புறப்படுவதற்கான இடம் மற்றும் இறங்குவதற்கான இடங்கள் என முக்கிய பகுதிகளில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன. இந்த வழித்தடத்தை அமைப்பதுடன், அதற்கான தொலைத்தொடர்பு, வரைபடடங்கள், கண்காணிப்பு முறை, பயணிகளை கையாளும் அமைப்பு, தடுப்புகள், என அனைத்தும் உருவாக்க வேண்டியது மற்றும் ஃபிளையிங் டேக்ஸிகளுக்கான சமிக்ஜைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் ஒருங்கிணைந்த பெருமாநகர போக்குவரத்துக் கழகம் இது பற்றி கூறுகையில், ஆரம்பக் கட்டத்தில் இந்த ஏர் டேக்ஸி சேவையானது உணவு மற்றும் தளவாடங்களைக் கொண்டுச் செல்ல சோதனை முறையில் பயன்படுத்தப்படும் என்கிறது.

சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவது அத்தியாவசியம் என்று தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் சந்தீப் நந்துரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல் நகரமாக சென்னை இருக்கக் கூடும் என்றும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com