ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இலவச பஸ் பாஸ்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

News image
Updated On :7 ஜூன் 2024, 10:43 am

DIN

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 2024 ஜுன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள்-அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, மாநகர போக்குவரத்து கழகத்தால் 2023-24ல் வழங்கப்பட்ட பயண அட்டை- பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படததுடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.

ஜுன் 10, 2024 அன்று பள்ளிகள்/ அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, 2024-25 கல்வியாண்டில் மாணவர்/ மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அளவினை கருத்தில் கொண்டு மா.போ,கழக பேருந்துகளில் மா.போ.கழகத்தால் 2023-24ல் வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ள மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2023-24 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளி கல்விதுறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையினை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயக்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி/ மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்ல அனைத்து மா.போ.கழக நடத்துநர்/ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.