சென்னை மாநகரப் பேருந்து மாதாந்திரப் பயண அட்டை வழங்கும் மையங்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பயண அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்துவதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகிறார்கள். நாள்தோறும் பயணிப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாதாந்திரச் சலுகை பயண அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.
குளிா்சாதன வசதி பேருந்து தவிர மற்ற அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணிக்க மாதம் ரூ. 1,000-ம், குளிா்சாதன வசதி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்க மாதம் ரூ. 2,000-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
இந்த மாதாந்திரப் பயண அட்டைகள் மூலம் 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பணமில்லா பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சார்பில் ’சென்னை ஒன்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் உள்ளிட்டவற்றில் பயணம் செய்வதற்கு சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, சென்னை ஒன் செயலி மூலமே மாநகரப் பேருந்துகளின் ரூ. 1,000, ரூ. 2,000 மாதப் பயண அட்டைகளும், புறநகர் ரயில்களின் மாதப் பயண அட்டைகளும் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
மக்கள் தவிப்பு
இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை, ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இயங்கும் மாதப் பயண அட்டை வழங்கும் மையங்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ’சென்னை ஒன்’ செயலி மூலம் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், அயனாவரம் போன்ற பிற பகுதிகளில் இயங்கும் மையங்களிலுக்குச் சென்று பயண அட்டையைப் புதுப்பித்துக் கொள்ளும்படி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 16 ஆம் தேதி மாதப் பயண அட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலையில், பலரும் டிக்கெட் எடுத்துப் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ரூ. 1000 மாதாந்திரப் பயண அட்டை மூலம் சென்னை மாநகரப் பேருந்துகளில் அலுவலகங்களுக்குச் செல்வோர் முதல் கூலி வேலைக்கு செல்வோர் வரை பயனிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் சேமித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பயனாளிகளில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாகவும் அவர்களிடம் ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாதவர்களாகவும், இருந்தால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தை செய்யத் தெரியாதவர்களாகவே உள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் மக்கள் எரிச்சலடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
No Monthly Travel Passes for Chennai City Buses? Commuters in Distress!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள் ஜூன் 21 முதல் இலவச பேருந்து பயண டோக்கன் பெறலாம்

ஒரு ரூபாய்க்கு பேருந்து, ரயில், மெட்ரோவில் ஒருமுறை பயணிக்கலாம்! சென்னை ஒன் ஆஃபர்!

ரூ. 20 கோடி அரசு நிலம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு: மீட்க பொதுமக்கள் கோரிக்கை

அரசுப் பேருந்துகளில் தமிழறிஞா்கள் அவமதிக்கப்படுவதாகப் புகாா்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




