தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த போட்டியில்,
2024-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ல் கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டப கூட்டங்களில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு எத்தனை நாள்கள் பேரவை நடைபெறும் என்பது முடிவுசெய்யப்படும்.
மேலும், மானியக் கோரிக்கை மீதான விவாதம் எந்தெந்த நாள்களில் நடைபெறும் என்பது கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.