சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூன் 8) நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், முக்கிய முடிவாக, நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:
400 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வந்த பாஜக் 240 இடங்களுக்குள் சுருங்கியுள்ளது. பலவீனமான பாஜக அரசை, நமது முழக்கங்களின் மூலம் செயல்பட வைக்க வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் உள்ளது.
நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம். இத்தகைய சூழலில், நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும்.
ஏராளமான வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வைத்தோம். அவையனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து செயல்பட வைக்க வேண்டும்.இந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


