ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீலகிரியில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை வனத்துறையிடம் பிடிபட்டது!

காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை நீலகிரி வனத்துறையினரால் பிடிபட்டது!

News image
கோப்புப் படம்.
Updated On :8 ஜூன் 2024, 12:12 pm

DIN

நீலகிரி: தொடர்ந்து 5 நாட்களாக குடியிருப்பு பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் இன்று பிடித்தனர்.

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கூடலூர் பகுதியில், தொடர்ந்து ஐந்து நாட்களாக காலில் காயங்களுடன் சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வந்தனர். கூடலூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வனத்துறையினர் இரண்டு கூண்டுகளை நிறுவி, தானியங்கி கேமராக்கள் பொறுத்தியும் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் தேவர் சோலை அருகே உள்ள தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதியில் வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.