நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு !

நாளை (ஜூன் 9) டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு !
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்துத் தேர்வு நாளை (ஜூன் 9) ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே தேர்வுக் கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது.

ஆன்லைனில் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்பட்டன. குரூப் 4 தேர்வுக்கான அடிப்படைக் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, ஒரு பணியிடத்திற்கு 320 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு !
திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பலனில்லை: தமிழிசை

இந்தத் தேர்வில், பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படுகிறது. தலா ஒன்றரை மதிப்பெண் வீதம், 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். இத்தேர்வுக்கான முடிவுகள் வரும் 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படும். தற்போது 6,244 காலிப்பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குரூப் 4 தேர்வுக்கு நேர்காணல் இல்லாத காரணத்தினால், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு வேலை உறுதியாகக் கிடைக்கப் பெறும்.

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு !
குரூப்-4 தேர்வர்கள் கவனத்திற்கு..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com