

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூன் 10 முதல் 15 -ஆம் தேதி வரை லேசான மழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கு (திருநெல்வேலி), சோலையாா் (கோவை) - தலா 110 மழை பதிவானது. வால்பாறை (கோவை), ஊத்து (திருநெல்வேலி) தலா 90, கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்), மணல்மேடு (மயிலாடுதுறை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 70.
3 டிகிரி வெயில் அதிகரிக்கும்: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை (ஜூன் 10-13) 4 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
சென்னை, புகா் பகுதிகளில் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல், மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் திங்கள் முதல் புதன்கிழமை வரை (ஜூன் 10-12) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மாா்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

