காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

3வது முறை பிரதமராக மோடி பதவியேற்பது சாதனை: ரஜினிகாந்த்

News image
Updated On :9 ஜூன் 2024, 3:40 am

DIN

மோடி 3வது முறை பிரதமராக பதவியேற்பது அவரின் சாதனை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா். தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்யவிருக்கிறாா்.

அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.

பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தில்லி புறப்படும் முன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மோடி பதவியேற்பு விழாவுக்காக தில்லி செல்கிறேன். நேருவுக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கிறார். மோடி 3வது முறை பிரதமராக பதவியேற்பது அவரின் சாதனை என்றார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்க உள்ளார் இது மிகப்பெரிய சாதனை. மக்கள் இந்த மக்களவைத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான வழிமுறையாக பார்க்கிறேன்.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்சி எப்படி இருக்கும் என கேட்டபோது, நன்றாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கிறேன் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளது குறித்து கேட்டபோது எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.