வெற்றிக்காக 24 மணிநேரமும் பாடுபட்ட அண்ணாமலை: ஓபிஎஸ்
தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை களத்தில் பாடுபட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு, தில்லியில் இருந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு, அதிமுகவின் தோல்வி குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியதாவது:
”ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நின்ற எனக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் அளித்த மக்களுக்கு நன்றி. தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.
பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை முக்கிய காரணம். 24 மணிநேரமும் களத்தில் இறங்கி வெற்றிக்காக பாடுபட்டார்.
பிரிந்திருக்கக் கூடிய அதிமுக சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது.”
பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.