அன்னியூர் சிவா
அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Published on

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில், திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவதாக தமிழக முதல்வரும், திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தோ்தல் அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் ஜூலை 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அன்னியூர் சிவா
முன்னதாக தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

விக்கிரவாண்டி இடைத் தோ்தல் அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறுகிறது. வரும் ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். ஜூன் 24-ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். ஜூன் 26-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறலாம். ஜூலை 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடத்தை விதிகள் அமல்: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதி உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு முன்னதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com