விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா!

ஜூலை 10-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு.
சீமான்(கோப்புப்படம்)
சீமான்(கோப்புப்படம்)
Updated on
1 min read

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

அதில் ஜூலை 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அபிநயா
அபிநயா

அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா விவரக் குறிப்பு

பெயர்: பொ. அபிநயா

வயது: 29

பிறந்த தேதி: 13.06.1995

கல்வித் தகுதி: பி.ஹெச்.எம்.எஸ். எம்.டி.

தேர்தல் முன் அனுபவம்: 2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சிசார்பில் போட்டியிட்டு, 65,381 வாக்குகள் பெற்றார்.

பெற்றோர்: காமராஜ்-காந்திமதி

கணவர் பெயர்: பொன்னிவளவன்.

முகவரி: மாரியம்மன் கோயில் தெரு, பில்லூர், விழுப்புரம் மாவட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com