இது ஜனநாயகம் அல்ல; பண நாயகம்: சீமான்

அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு
சீமான்
சீமான்கோப்புப் படம்
Updated on
1 min read

அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் சீமான் பேசுகையில், "இங்கு ஆள் மாறுகின்றனர்; ஆட்சி மாறுகிறது. ஆனால், வேறெதுவும் மாறவில்லை.

இங்கும் ஊழல்; அங்கும் ஊழல். இங்கும் கமிஷன்; அங்கும் கமிஷன். சாராயக் கடை, மின் தட்டுப்பாடு, சரியில்லாத சாலை, சரியான போக்குவரத்து இல்லாமை, கல்வித் தரம் மற்றும் மருத்துவத் தரம் உயர்த்தப்படாதது. யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் - தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். யாருடைய பிள்ளைகளையும் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஏனென்றால், தரம் உயர்த்தப்படவில்லை. இதில் எந்த மாறுதலும் வரவில்லை. அப்படியென்றால், ஆட்சி முறைதான் மாற வேண்டும்.

ஊழல் அல்லது லஞ்சம் என்றால், பணியிட மாற்றம் செய்யாமல், பணிநீக்கம் செய்தால்தான் அது கட்டுக்குள் வரும். கல்வியும் மருத்துவமும் தரம் உயர்த்திக் கொடுத்தால், மக்களுக்குச் செலவு மிச்சமாகும். அப்படியென்றால், வருவாய்க்கு அதிகமான கையூட்டு வாங்குவதற்கான தேவை இல்லாமல் போகிறது. அதனையும் மீறி பெற்றால், அவர்களுக்கு கடும் தண்டனைதான் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிர்வாகம் இங்கில்லை.

பணி நியமனம், பணியிட மாற்றம், பணி உயர்வு என அனைத்துக்கும் பணம் கொடுக்கின்றனர். இது ஜனநாயகம் அல்ல; பணநாயகம்" என்று தெரிவித்துள்ளார்.

சீமான்
பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி: பிரதமர் மோடி
Summary

NTK Leader Seeman alleges that bribes have to be paid for everything

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com