

ஆசிரியர்கள், செவிலியர்கள் போராட்டங்களைக் கவனிக்காத முதல்வர் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் கருத்து பதிவிடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில் "தமிழனின் திருநாளை ஏன் திராவிட பொங்கல் என்று அடையாளப்படுத்துகிறீர்கள்?
இப்போதெல்லாம் தெருக்களில் நல்ல காலம் பிறப்பதாக குடுகுடுப்பைக்காரர்கள் வருவதில்லை. ஏனென்றால், இவர்களின் ஆட்சியில் என்றைக்குமே நல்ல காலம் பிறக்காது என்று அவர்களுக்குத் தெரியும்.
மொழிவழியே தேசிய நிலங்கள் பிரிக்கப்பட்டதா? மதம்வழியே பிரிக்கப்பட்டதா?
65 ஆண்டுகளாக ஆண்டுவிட்டார்கள்; ஆனால், இன்னும் தலைநகரிலேயே பயணிக்க பாதை இல்லை. மழைநீரும் கழிவுநீரும் தேங்காமல் வெளிசெல்வதற்கு எதுவுமில்லை.
வெள்ளத்தை தேங்கவைத்து, வெள்ள நிவாரணம் அளிப்பது தேர்தல அரசியல். வெள்ளமே தேங்காது சாலையை அமைப்பது மக்கள் அரசியல்.
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் போராடுகின்றனர், செவிலியர்கள் போராடுகின்றனர், ஊதிய உயர்வுக்காக அரசு மருத்துவர்கள் போராடுகின்றனர் - இவற்றையெல்லாம் கவனிக்காத முதல்வர், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்காமல் மறுப்பதாகக் கருத்து பதிவிடுகிறார்.
நான் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டபோது, குறித்த நேரத்தைவிட 5 நிமிடங்கள் கூடுதலாகப் பேசினேன். அதற்காக, என் மீதும் உடனிருந்தவர்கள் மீதும் 7 வழக்குகள் பதிந்து, 2 நாள்களாக நிற்க வைத்தனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் யார் மீதும் நீங்கள் முதல் தகவல் அறிக்கையை பதியவில்லை.
பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேசக் கூடாது என்று தடையிட்ட நீங்கள், சினிமா பேசக் கூடாது என்று ஏன் சொல்லவில்லை?" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.