ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்?- ஜெயகுமார் விளக்கம்

News image
ஜெயக்குமார் (கோப்புப்படம்)
Updated On :15 ஜூன் 2024, 12:39 pm

DIN

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக ஆட்சியில் இருக்கும் வரை இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது.

பணம், படை பலத்தை கொண்டு பரிசுகளை அள்ளிக்கொடுத்து போலி வெற்றியை பெற திமுக முயற்சிக்கும் என்றார்.

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.