
புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 18) கடிதம் எழுதியுள்ளார்.
3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள் மற்றும் முரண்பாடுகள் உள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும்,
புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களுடன் விவாதம், சட்டப் பாடங்கள் மாற்றியமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளதாகவும், சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசமைப்பு 348 பிரிவை தெளிவாக மீறுவதாக உள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா – 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா – 2023, பாரதிய சாக்ஷியா – 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.