கள்ளக்குறிச்சிக்கு புதிய ஆட்சியர், எஸ்.பி.

கள்ளக்குறிச்சிக்கு புதிய ஆட்சியர், எஸ்.பி.

கள்ளச்சாராய விவகாரத்தில் புதிய ஆட்சியர், எஸ்.பி. நியமனம்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கள்ளச்சாரயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சியர் ஷ்ரவன் குமாருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ். பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரஜத் சதுர்வேதி
ரஜத் சதுர்வேதி

அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com