திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி- ஆட்சியர், எஸ்.பி.க்களுடன் முதல்வர் ஆலோசனை

News image
Updated On :21 ஜூன் 2024, 1:29 pm

DIN

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 49 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 114-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள கண்டனம் தெரிவித்ததோடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் மற்றும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச்செயலத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக அவர் மேற்கொண்ட ஆலோசனையில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.