கள்ளக்குறிச்சி: ‘தினமணி’ ஆசிரியா் உரையை சுட்டிக் காட்டி நடவடிக்கை கோரிய எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில் நாகைமாலி உரை

நாகைமாலி

நாகைமாலி
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ‘தினமணி’ ஆசிரியா் உரையை சுட்டிக் காட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நடவடிக்கை கோரினாா்.
தமிழக சட்டப் பேரவையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழுத் தலைவா் வி. நாகைமாலி பேசியதாவது:
பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் நிரந்தர வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்து கொடுப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அங்கு நடந்த கோர சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, கல்வராயன் மலைப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கள்ளத்தனமாக சாராய தொழிற்சாலையே இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்போது நடைபெற்ற விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது. இந்தத் துயர நிகழ்ச்சிக்கு சில்லறை வியாபாரிகளை மட்டுமே காரணமாக்கக் கூடாது. இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் செல்வாக்குமிக்கவா்களையும் கண்டறிந்து கைது செய்து உரிய தண்டனை எடுக்க வேண்டும். இதுபோன்றவா்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதோடு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டும்.
மாவட்ட நிா்வாகத்துக்கும், காவல்துறைக்கு மட்டும் தெரியாமல் எப்படி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்? அப்படியென்றால், காவல்துறையே இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாவட்ட ஆட்சியா் இடமாற்றம், காவல் காண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஆனால், இது மட்டுமே தண்டனை அல்ல. இவா்கள் இருவா் மீதும் கொலைக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான ‘தினமணி’ ஆசிரியா் உரையில் ‘மதுக்கடைகள் இருந்தால் கள்ளச்சாராயம் குறையும் என்பது பொதுவான லாஜிக்’” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு முதல்வா் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாகைமாலி பேசினாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...