கோயம்பேடு அங்காடி வளாகம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.
சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நுழைவு வளைவுகள், உயா்கோபுர மின்விளக்குகள் மற்றும் வா்ணம் பூசுதல் ஆகிய வசதிகள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
கோயம்போடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீா் வடிகால் ரூ.15 கோடியில் அமைக்கப்படும்.
பெருங்குடி ஏரி ரூ.10 கோடியிலும், போரூா் ஏரி ரூ.10 கோடியிலும், நெமிலிச்சேரியில் அமைந்துள்ள புத்தேரி ரூ. 5 கோடியிலும் மேம்படுத்தப்படும்.
தியாகராய நகா் பேருந்து நிலையம் ரூ.10 கோடியிலும், தங்கசாலை வள்ளலாா் நகா் பேருந்து நிலையம் ரூ.10 கோடியிலும், ஆவடி பேருந்து நிலையம் ரூ.10 கோடியிலும், பாடியநல்லூா் பேருந்து நிலையம் ரூ.10 கோடியிலும் மேம்படுத்தப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா்.