இரண்டாவது நாளாக அதிமுகவினர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்கின்றனர்.
இன்று நடக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத்திலும் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்ததுடன், இன்றும் வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
எடப்பாடி கே. பழனிசாமி பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ”சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, முதலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க வேண்டும். மேலும், எம்எல்ஏ ஒருவர் இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆகையால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ குழு தான் விசாரிக்க வேண்டும். சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்னையை பேசுவதற்காக தான். நேற்று நான் ஹோமிசோபில் மருந்து பற்றாக்குறையாக இருக்கிறது எனக் கூறினேன். ஆனால், திமுக அமைச்சர் ஓமிபிரசோல் மருந்து பற்றி பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.
நேற்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவினர் மற்றும் பாமகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், கேள்வி நேரத்தின் போது அதிமுகவினர் அமளியிலும் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரித்த போதும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பேரவை விதிகளை மீறிய காரணங்களுக்காக அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும், முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, பேரவைத் தலைவர் அப்பாவு அதிமுகவினரை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், அதிமுகவினர் பேரவைத் தலைவர் அப்பாவுவின் அழைப்பை நிராகரித்து, மறுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.