காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூன் 24, 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

News image
கனமழை அறிவிப்பு
Updated On :23 ஜூன் 2024, 9:18 pm

Din

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூன் 24, 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29-ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில், ஜூன் 24, 25-ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையான மழை அளவு (மிமீ): குடிதாங்கி (கடலூா்), சின்னக்கல்லாா் (கோவை) - தலா 70, தேவாலா, பந்தலூா் (நீலகிரி) - தலா 60, திருவாடானை (ராமநாதபுரம்), கூடலூா் பஜாா், மேல் கூடலூா் (நீலகிரி) - தலா 50. புதுக்கோட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, சிவகங்கை, சேலம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு மழை பதிவாகியுள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூன் 24-27) வரை அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை, இயல்பை விட அதிகமாகவும் இருக்கும்.

சென்னையில்... சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஜூன் 24, 25 -ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல், தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், மேற்குவங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.