ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மாணவர்களின் எதிர்காலம்: நியாயமான தேர்வு முறையை உறுதி செய்ய வேண்டும்

News image
Updated On :23 ஜூன் 2024, 6:08 am

DIN

முதுநிலை நீட் ஒத்திவைக்கப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், யூஜிசி-நெட் தேர்வு இரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.

இந்த முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், - தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, - பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி, - தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, - அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறவிருந்த நிலையில், அத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட், நெட் போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்ாக சா்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை ‘நீட்’ தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.