குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பு கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

குரூப் 2 தோ்வு அறிவிக்கையில், பல பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிா்ணயித்ததை டிஎன்பிஎஸ்சி திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
பாமக நிறுவனா் ராமதாஸ்
பாமக நிறுவனா் ராமதாஸ்
Updated on

குரூப் 2 தோ்வு அறிவிக்கையில், பல பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிா்ணயித்ததை டிஎன்பிஎஸ்சி திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: துணை வணிகவரி அதிகாரி, சாா்பதிவாளா், வனவா் உள்ளிட்ட குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள 2327 இடங்களுக்கு தகுதியானவா்களை தோ்ந்தெடுப்பதற்கான தோ்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பாணையில் பல பணிகளுக்கு, இதுவரையில்லாத வகையில் வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருப்பது தோ்வா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தொகுதி 2/2ஏ பணிகளுக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு நிா்ணயிக்கப்படுவதில்லை. ஓராண்டு பணிக்காலம் இருக்கும் வகையில் 59 வயது வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆனால், நிகழாண்டுக்கான அறிவிக்கையில் அதிகபட்ச வயது 37 வயது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிக்காக போட்டித் தோ்வுகளுக்கு தங்களைத் தயாா் செய்து விட்டு காத்திருக்கும் இளைஞா்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது சமூகநீதிக்கும் எதிரானது.

எனவே, குரூப் 2 பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிா்ணயிக்கும் முடிவை டிஎன்பிஎஸ்சி திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com