தமிழ்நாட்டிற்கு சாலை வளர்ச்சி மிக முக்கியமானது: முதல்வர் ஸ்டாலின்
கிராமப்புற சாலைகளுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் முதல்வர்


தமிழ்நாட்டிற்கு சாலை வளர்ச்சி மிக முக்கியமானது என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு திங்கள்கிழமை காலை தொடங்கியது. அப்போது 110 விதியின் கீழ் பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை அரசு செய்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் ஊராட்சி சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்பட்டன.
கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் முக்கியமாக இருக்கின்றன. ஊரக பகுதி சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தி வருகிறோம். 8,000 கி.மீ.க்கு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் 10,000 கி.மீ. கிராமப் புற சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...