தூத்துக்குடி அருகே கார் ஏற்றி தந்தை கொலை: மகன் கைது
புளியம்பட்டியில் சொத்து தகராறில் தந்தை கொலை: மகனின் கொடூரம்


புளியம்பட்டி அருகே சொத்து பிரச்னை காரணமாக தந்தையை கார் ஏற்றி கொலை செய்ததாக அவரது மகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்த பலவேசம் மகன் கருப்பசாமி (70). விவசாயியான இவருக்கு மனைவியும், சின்னத்துரை (45) என்ற ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். கருப்பசாமி தனது நிலத்தை தனியார் சோலார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விட்டாராம்.
இதனை அறிந்த அவரது மகன் சின்னத்துரை, தந்தை கருப்பசாமியிடம் தகராறு செய்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் ஆலந்தா பகுதியில் உள்ள சாலையில் கருப்பசாமி நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த சின்னத்துரை, நடந்து சென்ற கருப்பசாமி மீது காரை ஏற்றி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தககவல்அறிந்த புளியம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கருப்பசாமி சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சின்னசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சொத்து பிரச்னைக்காக தந்தையை மகன் கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...