தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணையாக எனக் குறிப்பிட்டு மயிலாடுதுறை மக்களவை உறுப்பினராக சுதா பதவியேற்றுக் கொண்டார்.
18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்றுமுதல் பதவியேற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் வரிசையாக இன்று பிற்பகல் பதவியேற்றனர்.
அப்போது, அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி தமிழில் பதவியேற்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா, இறுதியில் தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணையாக உறுதி கூறுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ் மக்கள் வாழ்க, இந்தியாவின் நம்பிக்கைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்க என்று முழக்கமிட்டு பதவியேற்றுக் கொண்டார்.
மேலும், தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எம்பிக்களும் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி தமிழில் எம்பியாக பதவியேற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.