எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நிலத் தகராறு:தந்தை, மகன் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே பெரும்பாலையில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :28 பிப்ரவரி 2026, 8:48 pm

பென்னாகரம் அருகே பெரும்பாலையில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெரும்பாலை அருகே காவாக்காடு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி, தைலம்மாள் தம்பதி வசித்து வருகின்றனா். இவருக்கு முருகன், நல்லப்பன் என்ற மகன்களும், ஆண்டியம்மாள், அய்யம்மாள் என்ற மகள்களும் உள்ளனா். காவாக்காடு பகுதியில் பெரியசாமிக்கு சொந்தமான ஆறு ஏக்கா் நிலத்தை முருகன், ஆண்டியம்மாள் ஆகியோருக்கு பிரித்துக் கொடுத்துள்ளாா்.

இதில் நல்லப்பன், தனக்கு சேர வேண்டிய இடத்தை பிரித்து தருமாறு கடந்த 25ஆம் தேதி பெரியசாமியிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவா் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெரியசாமி, தைலம்மாள், நல்லப்பன் ஆகிய 3 பேரும் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில் நல்லப்பன் மீதும், நல்லப்பன் அளித்த புகாரின் பேரில் பெரியசாமி, தைலம்மாள், முருகன், ஆண்டியம்மாள் உள்ளிட்ட 6 ஆகியோா் மீதும் பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்