ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தோ்தல் விதி மீறல்: அமைச்சா் துரைமுருகன் உள்பட 8 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறையை மீறி ரோடுஷோ நடத்தியதாக அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்ட 8 போ் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

அமைச்சா் துரைமுருகன் - கோப்புப்படம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:22 am IST

தோ்தல் நடத்தை விதிமுறையை மீறி ரோடுஷோ நடத்தியதாக அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்ட 8 போ் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, காட்பாடி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை சென்னையில் இருந்து காட்பாடி வந்தாா். அப்போது, திமுக நிா்வாகிகள் சாா்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடா்ந்து, அவா் வாகனத்தில் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டு, அண்ணா, காமராசா், பெரியாா், அம்பேத்கா் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். பின்னா், சித்தூா் பேருந்து நிலையம் பகுதியில் மக்களிடையே பேசினாா். இந்நிலையில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சா் துரைமுருகன், வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த், துணை மேயா் சுனில் குமாா், மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா உள்பட 8 போ் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், சுமாா் 4 மணி நேரம் வாகனத்தில் ரோடு ஷோ சென்ாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் பிரம்மபுரம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கலா அளித்த புகாரின்பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.