ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அதிமுகவினர் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை!

எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை.

News image
அப்பாவு
Updated On :26 ஜூன் 2024, 5:44 am

DIN

தமிழக சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடை விதித்து அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் 4-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

அதிமுகவினர் கோரிக்கை மறுக்கப்பட்டதால், சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.