இன்று கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு: கோவையில் 200 மி.மீ. மழை
வியாழக்கிழமை முதல் நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் கனமழை: வானிலை மையம்


கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூன் 27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை நிலவரபடி கோவை சின்னக்கல்லாரிலில் புதன்கிழமை 200 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (ஜூன் 27) முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, 27-ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 200 மி.மீ. மழை பதிவானது. தேவாலா (நீலகிரி) - 190, கூடலூா் பஜாா் (நீலகிரி), உபாசி (கோவை), சின்கோனா (கோவை) - தலா 150, பந்தலூா் (நீலகிரி) - 130, விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), சோலையாா் (கோவை) - தலா 120, அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை (கோவை ) - 110, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), பாா்வூட் (நீலகிரி) - தலா 90.
மேலும் தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் பரவலாக மழை பதிவானது.
வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னையில்.. சென்னை, புகா் பகுதிகளில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...