தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை! -விஜய்

தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை எனக் கூறியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை! -விஜய்
Published on
Updated on
1 min read

2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது விழா அரங்கிற்கு வந்த தவெக தலைவர் விஜய், 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறார்.

மாணவர்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம் என்று அறிவுறுத்தல் தற்காலிக மகிழ்ச்சிக்கும், போதை பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும், 'say no to drugs' என போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார்.

நான்குநேரியில் ஜாதிய கொடுமையால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுரை அருகில் அமர்ந்தார்.

மேலும், விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:

உங்களுக்கு பிடித்த துறை தேர்வு செய்துகொள்ளுங்கள். வீட்டில் உள்ள பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கலந்து பேசி நல்ல துறை தேர்வு செய்யுங்கள். நாம் ஒரு துறையை தேர்வு செய்யும்போது அதில் எவ்வளவு தேவை இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், மருத்துவர்களும், பொறியாளர்களும், வழக்குரைஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான்.

தலைவர் என்பது அரசியல் ரீதியாக மட்டுமல்ல. எந்தத் துறையில் சிறந்து விளங்கினாலும் அந்தந்த துறைகளில் தலைமைப் பதவிக்கு வர முடியும். எதிர்காலத்தில் அரசிலும்கூட ஒரு வேலைவாய்ப்பு வழிகாட்டியாக இருக்கலாம். நன்கு படித்தவர் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல தலவர்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சமூக வலைதளத்தில் ஒருசில அரசியல் கட்சிகள் செய்யும் பொய் பிரசாரங்களை மாணவர்கள் நம்பக் கூடாது. அது சில நேரங்களில் புரளியாக கூட இருக்கலாம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com