இனி பிறந்தநாளை படகில் கொண்டாடலாம்: கோவை படகு இல்லத்தில் அறிமுகம்!

பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளை படகில் கொண்டாடும் வகையில் கோவை படகு இல்லத்தில் படகுச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திமிங்கலம் தோற்றத்தில் படகு
திமிங்கலம் தோற்றத்தில் படகு
Published on
Updated on
1 min read

கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனமாக்கப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வ சிந்தாமணி குளம், வாலாங்குளம், குமாரசாமி மற்றும் செல்வ சிந்தாமணி குளம் ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைளுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டது.

மேலும் திறந்தவெளி அரங்கம் விளையாட்டுத் திடல், உணவுக் கூடங்கள், படகு துறை மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் உக்கடம் பெரியகுளம் பகுதியில் படகு இல்லம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதில் தற்போது முதலை தோற்றத்துடன் சில வசதிகள் கொண்ட படகு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பிறந்தநாள் கொண்டாட்டம், விருந்துகள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்வுகளை நடத்துவதற்கும் பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்தப் படகில் 35 பேர் அமரக் கூடிய இருக்கைகள் உள்ளது. இதற்கு ஒரு நபருக்கு 150 ரூபாய் வசூலிக்கின்றனர். உக்கடம் பெரியகுளம், வாலாகுளம் முழுவதும் ஒரு மணி நேரம் சுற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுகிறது.

தனியார் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் மட்டுமே கோவையில் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தப் படகில் குளத்தில் நடுவே சென்று முக்கிய நாள்களைக் கொண்டாடி மகிழ்வது மக்களிடையே மிகுந்த வரவேற்புப் பெற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com