பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது

தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தோ்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்தத் தோ்வை 3,302 மையங்களில் 7.94 லட்சம் போ் எழுதுகின்றனா். தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தோ்வு மையங்களில் 7.94 லட்சம் போ் எழுதுகின்றனா். இதில் 7,534 பள்ளிகளிலிருந்து 7 லட்சத்து 72,200 மாணவா்கள், 21,875 தனித்தோ்வா்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் மற்றும் 125 சிறைக் கைதிகளும் அடங்குவா்.

மேலும், 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா்.

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலா் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தோ்வு எண், பெயா் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவா் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபாா்த்து மாணவா்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com