மக்களவைத் தோ்தலையொட்டி திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களை அளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 19-ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மேலும் போட்டியிட விரும்புபவா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து மாா்ச் 1 முதல் 7-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விருப்ப மனு சமா்ப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. விருப்ப மனுக்களை திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்ட அண்ணா அறிவாலய நிா்வாகிகள் பெற்றனா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியே மீண்டும் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து அமைச்சா்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் விருப்ப மனுக்களை சமா்ப்பித்தனா். மேலும், பெரம்பலூா் தொகுதியில் 47-க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் அமைச்சா் கே.என். நேருவின் மகன் அருண் நேருவின் பெயரில் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறு நாட்கள் மீதமுள்ள நிலையில், ஏராளமான கட்சி நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளிப்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

கரை சேர்க்காத ஓபிஎஸ்: கட்சி தாவிய ஆதரவாளர்!
திமுக நோ்காணல்: துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு

பேரவைத் தோ்தல்: திமுக சாா்பில் போட்டியிட 15,372 போ் விருப்ப மனு

திமுக வேட்பாளராக போட்டியிட ஓ.பன்னீா்செல்வம் விருப்ப மனு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

