காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சகோதரர் காலமானார்

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சகோதரர் எம்.ராமகிருஷ்ணன்(82)உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
எம்.ராமகிருஷ்ணன்
எம்.ராமகிருஷ்ணன்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69 ஆவது மடாதிபதியாக இருந்து மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சகோதரர் எம்.ராமகிருஷ்ணன்(82)உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69 ஆவது மடாதிபதியாக இருந்து மறைந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.இவரது பூர்வாசிரம சகோதரர் எம்.ராமகிருஷ்ணன்(82)சிவபதம் அடைந்தார். இவர் சங்கரா கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றி 30-க்கும் மேற்பட்ட சங்கரா பள்ளிகளை தொடங்கி நிர்வாகம் செய்து வந்தார்.

எம்.ராமகிருஷ்ணன்
நாட்டில் 73% பங்கு வகிக்கும் பின்தங்கிய சமூகத்தினரை மத்திய அரசு புறக்கணிக்கிறது: ராகுல்

மேலும் காஞ்சி சங்கரமடத்தின் வேறு சில அறக்கட்டளைகளிலும் இயக்குநராக இருந்து ஏழை,எளிய மக்களுக்கு சேவையாற்றியவர். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் துரைப்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு-98409 20505

இவரது மறைவையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், கச்சபேசுவரர் ஆகிய கோயில்களில் மோட்ச தீபதமும் ஏற்றப்பட்டதாகவும் காஞ்சி ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com