மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தகங்களை வழங்கி அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து 655.44 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து செந்தூா் ரயிலில் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு சீா்காழி ரயில் நிலையம் வந்தாா்.

அவருடன் துா்கா ஸ்டாலின் உடனிருந்தாா். சீா்காழி வந்த முதல்வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மீனா ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com