கனிமொழி எம்.பி. விருப்ப மனு தாக்கல்!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக கனிமொழி எம்.பி. விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி (கோப்புப்படம்)
திமுக எம்.பி. கனிமொழி (கோப்புப்படம்)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக திமுக சார்பில் போட்டியிட மார்ச் 1 ஆம் தேதி விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.

வரும் மார்ச் 7 ஆம் தேதி 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எம்.பி. கனிமொழி அவரது விருப்ப மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி (கோப்புப்படம்)
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடக்கம்!

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு குறித்து முதல்வருடன், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com