சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை மண்ணடியில் உள்பட பல்வேறு தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையினர் சென்னையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் விசாரணைக்காக 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று(மார்ச். 5) காலை முதல் பெங்களூரைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் மன்னடி அடுத்த முத்தியால்பேட்டை பிடாரி கோவில் தெருவில் உள்ள ஒருவரின் வீட்டில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் சென்னை, ராமநாதபுரத்தில் ஐந்து இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் கடந்த 1 ஆம் தேதி ராமநாதபுரம் கஃபே என்ற உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஆய்வு செய்தபோது உணவகத்திற்கு சாப்பிட வந்த ஒருவர் பையில் வெடிகுண்டு வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த நபரின் அங்க அடையாளங்களை வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.மேலும் 4 நபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தற்போது சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கோவை சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது பெங்களூர் உணவகம் குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com