
கடந்த ஆண்டு செப். 2-ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளா் சங்கத்தின் சநாதன ஒழிப்பு மாநாட்டில், சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சா் உதயநிதி பேசியிருந்தாா். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரத்தில் அமைச்சா்கள் உதயநிதி, சேகா்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோா் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சநாதன தா்மம் விவகாரத்தில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், சேகா்பாபு, ஆ.ராசா எம்.பி. ஆகியோா் மீதான வழக்குகளில் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இன்று வழங்கிய தீர்ப்பில், “மனுதாரர் கோரிக்கையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. சநாதனம் குறித்த பல்வேறு வழக்குகள் நாடு முழுவதும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. ஆனால், எந்த வழக்குகளில் தண்டனை வழங்கப்படவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
சநாதன சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான கோ-வாரண்டோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.